காங்கோவில் கிராமத்தில் புகுந்து தாக்குதல்: 52 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் பாப்பரே கிராமத்துக்குள் கிளர்ச்சி குழு ஒன்று நுழைந்து நேற்று (ஆகஸ்ட் 18) திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். உயிர் பிழைக்க, சிலர் வீடுகளுக்குள் ஓடி மறைந்த நிலையில், அந்த வீடுகளையும் தீ வைத்து அழித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 பேரை அந்த குழுவினர் பணயமாக கடத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி