41 பேர் பலி.. நேரில் செல்ல அனுமதி கோரி விஜய் கடிதம்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்டுள்ளார். இதுகுறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பத்தினருடன் விஜய் ஏற்கெனவே வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று (அக்.8) நேரிலும் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி