41 மரணம் - சிபிஐ விசாரணை கோரிய மனு ஏற்பு

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அளிக்கப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. கடந்த செப்., 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். பிரச்சாரத்திற்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்தி