தற்போதைய அரசியல் சூழலின் அடிப்படையில், 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தேர்தல் கணிப்பின்படி, திமுக கூட்டணி 105 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளும் வெற்றி பெறக்கூடும். மீதமுள்ள 39 தொகுதிகள் இழுபறியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழுபறி தொகுதிகளில் நாம் தமிழர், தேமுதிக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே தேர்தல் முடிவுகள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.