தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவரின் ரிசார்ட்டில், கடந்த 14ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த உர நிறுவனத்தின் பார்ட்டி ஒன்று நடத்தது. அங்கு, 20க்கும் மேற்பட்ட பெண்கள் அரை நிர்வாணமாக நடனமாடினர். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, 56 உர வியாபாரிகளை கைது செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்த பெண்கள் மீட்கப்பட்டனர். வியாபாரிகளுக்கு அவர்களின் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பனை செய்வதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு விருந்து கொடுத்தது தெரியவந்தது.
நன்றி: TeluguScribe