ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா, மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில், 13 ராணுவ அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 14) உயிரிழந்த இறந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
நன்றி:X